திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று 2-ம் நாளாக வேலை நிறுத்த போராட்டம்


திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று 2-ம் நாளாக வேலை நிறுத்த போராட்டம்
x

திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று 2-ம் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை,

திருப்பூர் மற்றும் கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 2 லட்சம் விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விசைத்தறிகளுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் கொடுத்து அதை துணியாக மாற்றி விற்பனை செய்து வருவார்கள். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாகவே பருத்தி மற்றும் நூல் விலை கடுமையாக உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பின்னலாடை மற்றும் அது சார்ந்து இயங்கும் ஜாப் ஒர்க் உட்பட பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நூல் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி திருப்பூர், கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்று 2-ம் நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் 3 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சம் விசைத்தறிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அடுத்த மாதம் (ஜூன்) 5-ந் தேதி 15 நாட்களுக்கு வேலை நிறுத்தம் போராட்டம் நடத்த உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தின் காரணமாக நாள் ஒன்றுக்கு கோவை, திருப்பூர் ஆகிய 2 மாவட்டங்களிலும் சேர்த்து ரூ.100 கோடிக்கு ஜவுளி உற்பத்தி வர்த்தகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


Next Story