திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு ஆட்கள் தேர்வு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்


திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு ஆட்கள் தேர்வு - போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார தளபதி பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் தெரிவித்தார். திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் வட்டார தளபதி பதவிக்காலம் நிறைவு பெற உள்ளதை தொடர்ந்து புதிய வட்டார தளபதிக்கான ஆள் தேர்வு நடைபெற உள்ளது. இந்த பதவிக்கு விருப்பமுள்ள தனியார் நிறுவன தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆண் மற்றும் பெண் என இரு பாலர்களின் விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45-க்கு உட்பட்டு இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், அவரது இருப்பிடமானது திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் இருக்க வேண்டும். பொது நல சேவை, தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமுடையவராக இருக்க வேண்டும்.

மேற்படி தகுதிகள் உள்ள அனைவரும் தங்களது விருப்ப மனுவில் அவர்களின் தற்போதைய பணி விவரங்களுடன் பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும். மனுவுடன் பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள், உடற் பகுதி குறித்த அரசு மருத்துவரின் மருத்துவ சான்றிதழ், தற்போதைய புகைப்படம் (பாஸ்போர்ட் அளவு இரண்டு) போன்ற ஆவண நகல்களை இணைக்க வேண்டும். அடுத்த மாதம் 30-ந்தேதிக்குள் தக்க ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படும் மனுக்கள் மட்டும் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story