திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி சிப்காட் தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x

இயந்திரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சிப்காட் தொழிற்பேட்டை இயங்கி வருகின்றது. இங்கு பிளாஸ்டிக் உற்பத்திக்கான மூலப்பொருட்களை பிரித்து எடுக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இந்த தொழிற்சாலையில் உள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் துர்நாற்றதுடன் கூடிய கரும்புகை பரவத் துவங்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சுமார் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர்.




Next Story