திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி


திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வில் குளறுபடி
x

தமிழில் நுழைவுத் தேர்வு எழுத சென்ற மாணவர்களுக்கு, ஆங்கிலத்தில் வினாத்தாள் வழங்கப்பட்டதாக தேர்வர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருவாரூர்.

மத்திய பல்கலைக்கழகத்தில் சேர மாணவர்களுக்கு நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் விண்ணப்பத்து இருந்தனர். தமிழ்நாட்டில் 30 மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது.

இதில் தேர்வு மையங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வுகளில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டதால் தேர்வர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். இணையதளம் வாயிலாக நடத்தப்பட்ட தேர்வில் வினாத்தாள்கள் ஒரு மணி நேரம் காலதாமதமாக வெளியாகி உள்ளது.

அது மட்டுமின்றி தமிழில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்விதாள் வெளியாகி உள்ளது. இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் போன்ற தேர்வுகளைத் தமிழ் வழியில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த மாணவர்கள் ஆங்கில வினாத்தாள் வழங்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த குளறுபடி குறித்து பல்கலைக்கழக துணை வேந்தர் கிருஷ்ணன் விளக்கம் அளிக்கையில், நுழைவுத் தேர்வுக்கான மேலிடப் பார்வையாளர்கள் வருகை புரிந்துள்ளார்கள். அவர்கள் நுழைவுத் தேர்வில் நடைபெற்ற அனைத்துக் குளறுபடிகளையும் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தமிழில் தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.


Next Story