திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருவாரூர்,

சக்தி பீடங்களில் ஒன்றான வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வடக்கு திசையில் கமலாம்பாள் அம்மன் அருள் பாலித்து வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூர விழா நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு ஆடிப்பூர விழாவையொட்டி நேற்று இரவு கொடி ஏற்றத்துடன் விழா தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனையுடன் வீதியுலா நடைபெற்றது. பின்னர்; கமலாம்பாள் சன்னதியில் உள்ள கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைப்பெற்றன. இதனை தொடர்ந்து ரிஷப படம் வரையப்பட்ட கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று. மங்கள இசை முழங்க கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இன்று கமலாம்பாளுக்கு கேடக உற்சவம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து பூதம், யாணை, வெள்ளி ரிஷபம், கைலாசர் வாகனங்களில் அம்பாள் எழுந்தருளி விதியுலா நிகழ்ச்சி நடக்கிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான ஆடிப்பூர தேரோட்ட விழாவையொட்டி வருகிற 31-ந் தேதி காலை 9.30 மணிக்கு அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறபட்டு தேரில் எழுதருளுகிறார்.

மாலை 3.30 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டு தேரோட்ட நடைபெறுகிறது. இதனையடுத்து மறுநாள் (ஆகஸ்ட்) 1-ந் தேதி ஆடிபூர விழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி ராஜராஜேஸ்வரன் தலைமையில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story