தி.மலை ஏ.டி.எம் கொள்ளை: கொள்ளையர்கள் 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்


தி.மலை ஏ.டி.எம் கொள்ளை: கொள்ளையர்கள் 2 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்
x

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம்கள் உடைக்கப்பட்டு, ரூ.75 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி அதிகாலையில் திருவண்ணாமலை, போளூர் மற்றும் கலசபாக்கம் ஆகிய பகுதியில் 4 ஏ.டி.எம். மையங்களிலும் மர்ம நபர்கள் பணம் எடுக்கும் எந்திரங்களை வெல்டிங் எந்திரத்தின் மூலம் வெட்டி அதிலிருந்த ரூ.72 லட்சத்து 78 ஆயிரத்து 600-ஐ கொள்ளையடித்து சென்றனர்.

இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படையினர் அரியானாவிற்கு சென்று கொள்ளை கும்பல் தலைவன் தலைவன் அரியானா மாநிலம் நூ மாவட்டம் சோனாரி கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப் (வயது 35) மற்றும் புன்ஹானா மாவட்டம் பைமாகேரா கிராமத்தை சேர்ந்த ஆஜாத் (37) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை தனிப்படை போலீசார் அங்கிருந்து திருவண்ணாமலைக்கு அழைத்து வந்து திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், ஏடிஎம் கொள்ளை வழக்கில் கைதான ஆரிஃப் மற்றும் ஆசாத் ஆகியோர் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து வழக்கு தொடர்பாக இருவரையும் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Next Story