தமிழ்நாடு சட்டப்பேரவை அக்.9ம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு


தமிழ்நாடு சட்டப்பேரவை அக்.9ம் தேதி கூடுகிறது - சபாநாயகர் அறிவிப்பு
x

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 9ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.

சென்னை,

தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் 9ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்க உள்ளது.

கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்.

2023-24 ம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது' என்றார்.


Next Story