தமிழகத்தில் 2 ஆவது நாளாக 2 ஆயிரத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு..!
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 ஆவது நாளாக 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒருநாள் பாதிப்பு 2,069- ஆக இருந்த நிலையில், இன்று அதை விட சற்று அதிகமாக 2,385 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் ஒருநாள் பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று 909 ஆக இருந்த பாதிப்பு இன்று 1,025 ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 369, திருவள்ளூர்-121, கோவை 118, கன்னியாகுமரி 72, காஞ்சிபுரம் 84, திருச்சி 67 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் கொரோனாவால் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இன்று கொரோனாவில் இருந்து 1,321 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 12 ஆயிரத்து 158 பேர் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.