டி.என்.பாளையம், அந்தியூர் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது


டி.என்.பாளையம், அந்தியூர் பகுதியில்  மது விற்ற 2 பேர் கைது
x

டி.என்.பாளையம், அந்தியூர் பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

ஈரோடு

டி.என்.பாளையத்தை அடுத்த கொங்கர்பாளையம் குமரன் கோவில் ரோடு பள்ளத்துமேடு அருகே நேற்று பங்களாப்புதூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மொபட்டுடன் ஒருவர் மது பாட்டில்களை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார். இதனால் போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் பெரியகொடிவேரி பகுதியை சேர்ந்த சின்ன மாரப்பன் (வயது58) என்பதும், அவர் மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 60 மதுபாட்டில்கள் மற்றும் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் அந்தியூரில் உள்ள ஒரு ஓட்டலில் அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மது வைத்து விற்றதாக ஓட்டல் தொழிலாளி அந்தியூர் அருகே உள்ள ஜே.ஜே.நகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் (60) என்பவரை கைது செய்தனர். இவரிடம் இருந்து 213 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.9 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தப்பித்து ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Related Tags :
Next Story