22 மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வு; 3 ஆயிரத்து 687 பேர் எழுதினர்


22 மையங்களில் நடந்த குரூப்-1 தேர்வு; 3 ஆயிரத்து 687 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 19 Nov 2022 4:36 PM GMT (Updated: 20 Nov 2022 5:31 PM GMT)

தேனி மாவட்டத்தில் 22 மையங்களில் நடந்த குரூப்-1 முதல்நிலை தேர்வை 3 ஆயிரத்து 687 பேர் எழுதினர்.

தேனி

தேனி மாவட்டத்தில் 22 மையங்களில் நடந்த குரூப்-1 முதல்நிலை தேர்வை 3 ஆயிரத்து 687 பேர் எழுதினர்.

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் குரூப்-1 முதல்நிலை தேர்வு தமிழகம் முழுவதும் இன்று நடந்தது. தேனி மாவட்டத்தில் 22 மையங்களில் இந்த தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுத 6 ஆயிரத்து 70 பேருக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டு இருந்தது. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கி பகல் 12.30 மணி வரை நடந்தது.

இதற்காக காலை 7 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் வரத் தொடங்கினர். 9 மணிக்கு பிறகு தேர்வு மையங்களுக்கு வந்தவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். சிலர் தாமதமாக வந்ததால் அனுமதி கிடைக்காத ஏமாற்றத்தில் தேர்வு மைய நுழைவு வாயிலில் கண்ணீர் விட்டு அழுதனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த தேர்வு கண்காணிப்பு பணியில் 22 முதன்மை கண்காணிப்பாளர்கள், 305 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர். 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களில் திடீர் சோதனைகள் நடத்தினர். தேர்வு நடைமுறைகள் வீடியோ கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது.

இந்த தேர்வை மொத்தம் 3 ஆயிரத்து 687 பேர் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 2 ஆயிரத்து 383 பேர் தேர்வு எழுத வரவில்லை. வீரபாண்டி, முத்துதேவன்பட்டி பகுதிகளில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Related Tags :
Next Story