அஞ்சல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்


அஞ்சல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்
x

அஞ்சல்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வேலூர் கோட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்

தேசிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் வேலூர் கோட்டம் சார்பில் 38-வது மாநாடு வேலூர் தலைமை தபால் நிலையத்தில் இன்று நடந்தது.

தேசிய அஞ்சல் ஊழியர் சங்க வேலூர் கோட்ட தலைவர் விநாயகம், கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க வேலூர் கோட்ட தலைவர் திருவேங்கடம் ஆகியோர் தலைமை தாங்கினர். கோட்ட செயலாளர்கள் சிவலிங்கம், பால்ராஜ், கோட்ட பொருளாளர்கள் கிருபானந்தன், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சிறப்பு அழைப்பாளர்களாக நிர்வாகிகள் சிவக்குமார், சிவாஜிவாசி ரெட்டி, முரளிதரன், ராஜகோபாலன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

மாநாட்டில், அஞ்சல்துறையில் காணப்படும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்.

கிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கு கமலேஷ் சந்திரா அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், வேலூர் கோட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story