போலீஸ் சூப்பிரண்டிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு


போலீஸ் சூப்பிரண்டிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு
x

போலீஸ் சூப்பிரண்டிடம் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மனு கொடுத்தனா்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழக செயலாளர் ந.வெ.குமரகுருபரன் நேற்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், மதப்பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் சென்னிமலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனு அளிக்கப்பட்டபோது தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சந்திரன், துணை அமைப்பாளர் சக்திவேல், மாணவர் அணி அமைப்பாளர் கபிலன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story