சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை

கோப்புப்படம்
சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
சனிக்கிழமைகளில் இயங்கும் 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 22-ந்தேதி (இன்று) ஒருநாள் மட்டும் செயல்பாட்டில் இருந்து விலக்கு அளித்து விடுமுறை வழங்க தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்திடம் இருந்து கோரிக்கை வரப்பெற்றது. இந்த கோரிக்கையினை ஏற்று, அந்த 100 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு இன்று ஒருநாள் மட்டும் அலுவலக செயல்பாட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இனிவரும் சனிக்கிழமைகளில் அந்த அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






