தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
மாண்டஸ் புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.
மாண்டஸ் புயல்
வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. அது புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு-தென் கிழக்கிற்கும், சென்னைக்கும் இடையே மையம் கொண்டுள்ளது.
விடுமுறை
மாண்டஸ் புயல் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தஞ்சை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.