சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 'டாஸ்மாக்' கடைகளுக்கு இன்று விடுமுறை
டாஸ்மாக் கடைகளில் நேற்றிரவு மதுப்பிரியர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
சென்னை,
'மிக்ஜம்' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 மாவட்டங்களுக்கும் இன்று (திங்கட்கிழமை) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 'டாஸ்மாக்' கடைகள் இன்று மூடப்படும் என்று 'டாஸ்மாக்' நிர்வாகம் அறிவித்துள்ளது. 'டாஸ்மாக்' கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு வெளியானவுடன் இன்றைக்கு தேவையான மதுபானங்களையும் சேர்த்து மதுப்பிரியர்கள் நேற்று வாங்கி சென்றனர்.
மேலும் இந்த 4 மாவட்டங்களில் உள்ள 'டாஸ்மாக்' கடைகளில் நேற்றிரவு மதுப்பிரியர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.
Related Tags :
Next Story