கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை


கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
x
தினத்தந்தி 4 Oct 2023 6:44 AM IST (Updated: 4 Oct 2023 10:59 AM IST)
t-max-icont-min-icon

தொடர் மழை காரணமாக கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குமரி,

குமரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. சிறிது நேரம் கன மழையும், சிறிது நேரம் சாரல் மழையும் மாறி மாறி பெய்து வருகிறது. தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த நிலையில், தொடர் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story