இன்று 30 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் மட்டும் இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே


இன்று 30 நிமிடத்திற்கு ஒரு மின்சார ரெயில் மட்டும் இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே
x

கோப்புப்படம்

திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் மட்டுமே இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட மழை காரணமாக தண்டவாள வழித்தடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் இன்று (புதன்கிழமை) புறநகர் மின்சார ரெயில்கள் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் என்ற வீதத்தில் இயக்கப்படும்.

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம், செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் மீண்டும் தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை எழும்பூர் வரை மட்டும் இயக்கப்படும். 30 நிமிடத்திற்கு ஒரு ரெயில் மட்டும் இயக்கப்படும்.

இதேபோல சென்னை கடற்கரை - திருவள்ளூர், அரக்கோணம் இடையே உள்ள வழித்தடத்தில், சிந்தாதிரிப்பேட்டையில் - வேளச்சேரி இடையே உள்ள வழித்தடத்தில் 30 நிமிடங்களுக்கு ஒரு ரெயில் மட்டும் இயக்கப்படும். மேலும் திருவொற்றியூரில் இருந்து கும்மிடிப்பூண்டி வழிதடத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் மட்டுமே இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story