சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!


சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..!
x
தினத்தந்தி 27 Sep 2022 2:13 AM GMT (Updated: 27 Sep 2022 2:18 AM GMT)

சென்னையில் 129-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை.

சென்னை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் ஏறியதால் விலைக்குறைப்பு மேற்கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. அதன்பிறகு கடந்த 128 நாட்களாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தொடர்ந்து 129-வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 102 ரூபாய் 63 காசுகளுக்கும், டீசல் 94 ரூபாய் 24 காசுகளுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Next Story