வெங்காடு ஊராட்சியில் ரூ.80 லட்சத்தில் கழிவறைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்


வெங்காடு ஊராட்சியில் ரூ.80 லட்சத்தில் கழிவறைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
x

வெங்காடு ஊராட்சியில் ரூ.80 லட்சத்தில் கழிவறைகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஊராட்சி மன்ற தலைவர் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த வெங்காடு ஊராட்சியில் தனியார் நிறுவனம் சமுக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் கோனே தனியார் தொழிற்சாலை மூலம் சேவாலயா நிறுவனத்தினர் வெங்காடு, கருணாகரச்சேரி பகுதிகளில் சமுதாய கழிவறை, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், பள்ளி மாணவர்களுக்கு படிப்பதற்கான கட்டிடம், சுகாதார வசதிக்கான கட்டிடங்கள் போன்றவை கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு வெங்காடு ஊராட்சி மன்ற தலைவர் அன்னக்கிளி உலகநாதன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். தனியார் நிறுவன நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் ஸ்ரீபெரும்புதூர் வேளாண் கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன், தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், மகளிர் குழுவினர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story