தக்காளி கிலோ ரூ.180-க்கு விற்பனை
தக்காளி கிலோ ரூ.180-க்கு விற்பனை
ராமநாதபுரத்தில் தக்காளி விலை சற்றும் குறையாமல் நேற்று ஒரு கிலோ ரூ.180-க்கு விற்பனை ஆனது. இதனால் பொதுமக்கள் தக்காளி வாங்குவதை குறைத்துக்கொண்டு அத்தியாவசிய தேவைக்கு கால் கிலோ, அரை கிலோ என வாங்கி சென்றனர். இன்னும் பல நாட்களுக்கு தக்காளி விலை இதேபோல உச்சத்தில் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளதால் ஏழை, நடுத்தர பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல் ராமேசுவரத்தில் கடந்த 4 நாட்களுக்கு மேலாகவே தக்காளியின் விலை அதிகமாகவே இருந்து வருகின்றது. கடந்த வாரம் வரையிலும் ரூ.130-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலையானது கடந்த 4 நாட்களாக 1 கிலோ ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதனால் ராமேசுவரம் பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் தற்போது தக்காளியின் விற்பனை வெகுவாக குறைந்து விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.