கர்நாடகத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளிகள் திருடப்பட்டதாக புகார் - போலீஸ் விசாரணை


கர்நாடகத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளிகள் திருடப்பட்டதாக புகார் - போலீஸ் விசாரணை
x

தனது நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் திருடப்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ஐதராபாத்,

நாடு முழுவதும் தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், கர்நாடகத்தில் விவசாய நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த தக்காளிகள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி தரணி, தனது விவசாய நிலத்தில் இருந்து தக்காளிகள் திருடப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், 2 ஏக்கர் நிலத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 100 பெட்டிகள் அளவிற்கான தக்காளிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது ஒரு பெட்டி தக்காளி ரூ.2,500-க்கு விற்பனை ஆகும் நிலையில், திருடப்பட்ட தக்காளிகளின் மதிப்பு சுமார் ரூ.2.5 லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




Next Story