திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
திருவாரூர்,
வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு 700 கி.மீ தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளது. வேகம் குறைந்து கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது எனவும்
மேற்கு வட மேற்கில் நகர்ந்து இது புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story