திருவாரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை


திருவாரூர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 23 Nov 2023 1:49 PM GMT (Updated: 23 Nov 2023 2:02 PM GMT)

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்புவானோடை தர்காவில் கந்தூரி விழா நடைபெற்று வருகிறது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் ஜாம்புவான் ஓடை தர்கா கந்தூரி விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும் கந்தூரி விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது . இந்த விழாவை காண வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வர்.

இந்த நிலையில் சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு நாளை திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். இந்த நிலையில் சனிக்கிழமை வாக்காளர் சேர்க்கை முகாம் நடக்கவிருக்கிறது. எனவே சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.


Next Story