பல் பிடுங்கிய விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு


பல் பிடுங்கிய விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு
x

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.

நெல்லை,

அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு மாவட்ட குற்றப்பிரிவிலிருந்து சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் விசாரணை அதிகாரியும் மாவட்ட குற்றப்பிரிவின் டிஎஸ்பியுமான பொன் ரகு, நேற்று சிபிசிஐடி விசாரணை அதிகாரி உலக ராணியிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து அந்த ஆவணங்களை ஆய்வு செய்த பின்னர், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு நேரடியாக சென்று சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கொடுங்காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மற்றும் சிலர் என குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரக்கூடிய நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள், புகார்தாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் எடுத்து வருகின்றனர்.


Next Story