தொடர் விடுமுறையை கொண்டாட ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொட்டபெட்டா மலை சிகரத்தில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வருகை தந்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர்.
நீலகிரி,
காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜயதசமி, பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என அடுத்தடுத்து தொடர் விடுமுறைகள் இருப்பததால், விடுமுறையை கொண்டாட ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக தொட்டபெட்டா மலை சிகரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தோடு வருகை தந்து இயற்கை அழகை ரசித்து வருகின்றனர். அதே சமயம் நூற்றுக்கணக்கான வாகனங்கள் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் காத்திருந்ததால், ஊட்டி-தொட்டபெட்டா சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Related Tags :
Next Story