மாநில அளவிலான செஸ் போட்டி


மாநில அளவிலான செஸ் போட்டி
x

மாநில அளவிலான செஸ் போட்டி நடந்தது.

கரூர்

கரூரில் மாநில அளவிலான செஸ் போட்டி நேற்று காலை நடைபெற்றது. இந்த போட்டியை கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். 9, 11, 13, 20 வயதுக்குட்பட்டவர்கள் என மொத்தம் 4 பிரிவுகளாக நடந்தது. இதில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கரூர் உளபட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story