அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்த டிராக்டர் டிரைவருக்கு தர்ம அடி


அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்த டிராக்டர் டிரைவருக்கு தர்ம அடி
x

அரசு பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதம் செய்த டிராக்டர் டிரைவருக்கு தர்ம அடி விழுந்தது.

திண்டுக்கல்


கூடலூரில் இருந்து கோவை நோக்கி நேற்று ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் 35-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். பஸ் செம்பட்டி பஸ் நிலையம் அருகே வந்த போது அந்த வழியாக டிராக்டர் ஒன்று பஸ்சை உரசுவது போல் வந்தது. இதைப்பார்த்த கண்டக்டர் டிராக்டரை ஓட்டி வந்தவரிடம் சாலையோரமாக மெதுவாக செல்லும்படி கூறியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த அவர் டிராக்டரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, அரசு பஸ் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த டிராக்டர் டிரைவர், கண்டக்டரை அடித்துள்ளார். இதையடுத்து ஆத்திரமடைந்த கண்டக்டர், டிராக்டரை ஓட்டி வந்தவருக்கு தர்ம அடி கொடுத்ததுடன் அவருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி செல்லும் ஆம்புலன்ஸ் வந்தது.

ஆனால் ஆம்புலன்சுக்கு கூட வழிவிடாமல் சாலையில் பஸ்சை நிறுத்திவிட்டு கண்டக்டரும், டிராக்டரை ஓட்டி வந்தவரும் தகராறில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவர் சற்று சிரமப்பட்டு சாலையோரத்தில் ஆம்புலன்சை ஓட்டி அந்த இடத்தைவிட்டு கடந்து சென்றார். நடுரோட்டில் அரசு பஸ் கண்டக்டரும், டிராக்டர் டிரைவரும் தகராறில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Related Tags :
Next Story