பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் முற்றுகை


பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் முற்றுகை
x

பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

சென்னை

நெல்லையை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 37). இவர், சென்னையை அடுத்த மேடவாக்கம் ரங்கநாதபுரம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் பின்புறம் உள்ள குப்பைமேட்டில் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை சேகரித்து கொண்டு இருந்தார்.

அப்போது கஞ்சா போதையில் வந்த 3 பேர் ஆனந்தகுமாரை பணம் கேட்டு மிரட்டினர். அவர் பணம் இல்லை என்றதால் கத்தி, கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பிச் சென்றனர். இதில் காயம் அடைந்த ஆனந்தகுமார், பள்ளிக்கரணை போலீசில் புகார் செய்தார்.

ஆனந்தகுமாருக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர். வியாபாரியை தாக்கிய போதை ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story