வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்


வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்
x

நெல்லிக்குப்பத்தில் வணிகர்கள் கடையை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நெல்லிக்குப்பத்தில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. வர்த்தக பயன்பாட்டு 100 சதவீதம் சொத்து வரி உயர்வை நகராட்சி நிர்வாகம் மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தியும், மாநில அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நடைபெற்ற போராட்டத்திற்கு சங்க செயலாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாசர் அலி, நகர அமைப்பாளர் அமர்நாத், ஆலோசகர் முகமது அபுசாலிக், மேல்பட்டாம்பாக்கம் வர்த்தக சங்க தலைவர் சையது முகமது, துணை தலைவர் ராஜா ரஹீமுல்லா, இணைச் செயலாளர் பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட இணை செயலாளர் சுரேஷ் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல தலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் வீரப்பன், மாவட்ட பொருளாளர் ராஜ மாரியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வணிகர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர். முடிவில் சங்க பொருளாளர் சம்சுதீன் நன்றி கூறினார். இந்த கடையடைப்பு போராட்டத்தால் நெல்லிக்குப்பம் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story