திருச்செந்தூரில் 20 நாட்களுக்கு பின் துவங்கிய ரெயில் சேவை


திருச்செந்தூரில் 20 நாட்களுக்கு பின் துவங்கிய ரெயில் சேவை
x
தினத்தந்தி 6 Jan 2024 5:06 PM GMT (Updated: 6 Jan 2024 5:41 PM GMT)

நாளை முதல் பயணிகள் ரெயில் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை,

திருச்செந்தூர்-நெல்லை இடையே அமைந்துள்ள ரெயில் பாதை, கடந்த டிசம்பர் மாதம் 17-ந்தேதி பெய்த பலத்த மழையால் சேதம் அடைந்தது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட ரெயில் சேவையை சீர் செய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஆழ்வார்திருநகரி -நாசரேத் இடையே சேதம் அடைந்த தண்டவாளம் சீரமைக்கப்பட்டது. நேற்று முன்தினம் அங்கு தண்டவாளங்கள் பொருத்தப்பட்டு போக்குவரத்துக்கு தயாரானதை தொடர்ந்து டீசல் என்ஜின் மூலம் சோதனை ஓட்டம் நடந்தது.

இதனைத்தொடர்ந்து, இன்று இரவு 8:20 மணிக்கு திருச்செந்தூரிலிருந்து செந்தூர் விரைவு ரெயில் புறப்பட்டு திருநெல்வேலி வழியாக வழக்கம் போல இயங்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி திருச்செந்தூரிலிருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. இருப்பினும், ரெயில்வேயின் தாமத அறிவிப்பால் பயணிகள் இன்றி ரெயில் பெட்டிகள் வெறிச்சோடி காணப்பட்டன. நாளை முதல் பயணிகள் ரெயில் அனைத்தும் வழக்கம்போல் இயக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story