ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்


ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:00 PM GMT (Updated: 25 Oct 2023 7:00 PM GMT)

தென்காசி கல்லூரியில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தென்காசி

தமிழக அரசின் சிறு, குறு நடுத்தர தொழில்கள் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமானது பள்ளிக்கல்வித்துறை மற்றும் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டம் என்கிற திட்டத்தினை செயல்படுத்துகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்த ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு வழிகாட்டி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டம் குறித்தும் அதனை 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு கொண்டு செல்வது பற்றியும் ஒரு நாள் பயிற்சி முகாம் தென்காசி செந்திலாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முத்தையா தலைமை தாங்கினார். பாலிடெக்னிக் கல்லூரியின் தலைவர் புதிய பாஸ்கர் கலந்துகொண்டு வழிகாட்டி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினார். முகாமில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 94 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளி புத்தக மேம்பாட்டு திட்டம் சார்பாக தலைமை பயிற்சியாளர் சிவபாரதி, பயிற்சியாளர் கிப்சன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஏற்பாடுகளை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தக நிறுவனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுவைதரன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story