சின்னசேலத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி
சின்னசேலத்தில் மகளிர் உரிமைத்தொகை வழங்குவது குறித்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.
சின்னசேலம்,
தமிழக அரசின் மூலம் மகளிர் உரிமைத் தொகை வழங்குவது குறித்து இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வர்களுக்கான பயிற்சி சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சின்னசேலம் தாசில்தார் இந்திரா தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார். குடிமை பொருள் தனி தாசில்தார் கமலம், துணை தாசில்தார் மனோஜ் முனியன் முன்னிலை வகித்தனர் இதில் இல்லம் தேடி கல்வித் திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் வரவேற்றார். குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் விண்ணப்பங்களை பெறுவது, பூர்த்தி செய்வது, மொபைல் ஆப், வங்கி கணக்கு, சொத்து மற்றும் குடும்ப விவரங்கள் பதிவேற்றுவது குறித்த பயிற்சியை இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியர் பயிற்றுநர் பிரபாகரன் வழங்கினர். இதில் 200-க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.