21 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 21 வருவாய் ஆய்வாளர்கள் இடமாற்றம் மாவட்ட அலுவலர் உத்தரவு
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எச்.பிரிவில் பணிபுரிந்து வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் தமிழரசன், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பி.பிரிவுக்கும், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பானு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரேணுகா விழுப்புரம் கோட்ட கலால் பிரிவுக்கும், இங்கு பணிபுரிந்த வி.பிரபாகரன் மரக்காணம் தாலுகா அலுவலகத்துக்கும், திண்டிவனம் சிப்காட் அலுவலக துணை ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் சங்கீதா வானூர் தாலுகா அலுவலகத்துக்கும், இங்கு பணிபுரிந்து வரும் காமாட்சி திண்டிவனம் தாலுகா அலுவலகத்துக்கும் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 21 வருவாய் முதுநிலை ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி பிறப்பித்துள்ளார்.