3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக உள்துறை செயலாளர் பனிந்தீர ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
* லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி பவானீஸ்வரி, லஞ்ச ஒழிப்புத் துறை இணை இயக்குநராக நியமனம் செய்யப்படுகிறார்.
* சென்னை அமல்படுத்துதல் பிரிவு ஐஜி துரை குமார், லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.
* கட்டாய காத்திருப்புப் பட்டியலில் இருந்த வந்திதா பாண்டே, புதுக்கோட்டை எஸ்.பி.-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





