5 தாசில்தார்கள் இடமாற்றம்
விழுப்புரம் மாவட்டத்தில் 5 தாசில்தார்கள் இடமாற்றம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக பணியாற்றி வந்த வேல்முருகன் விழுப்புரம் தாசில்தாராகவும், விழுப்புரம் நிலஎடுப்பு தனி தாசில்தார் கோவிந்தராஜ் செஞ்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், திருவெண்ணெய்நல்லூர் தாசில்தார் கார்த்திகேயன் மரக்காணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், மரக்காணம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலசுப்பிரமணியன் மேல்மலையனூர் தாசில்தாராகவும், மேல்மலையனூர் தாசில்தார் அலெக்சாண்டர் திண்டிவனம் தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த கண்ணன் தாசில்தாராக பதவி உயர்வு பெற்று கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை பிரிவு தனி தாசில்தாராகவும், மேல்மலையனூர் மண்டல துணை தாசில்தார் நாராயணமூர்த்தி பதவி உயர்வு பெற்று விழுப்புரம் நில எடுப்பு தனி தாசில்தாராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் சி.பழனி பிறப்பித்துள்ளார்.