மின்வாரிய அலுவலகம் இடமாற்றம்
மின்வாரிய அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி
உப்பிலியபுரம்:
வைரிசெட்டிபாளையம் மின்வாரிய பிரிவு அலுவலகம் தற்போது இயங்கி வரும் கட்டிடத்தில் இருந்து மாற்றப்பட்டு, நாளை(புதன்கிழமை) முதல் 2/2டி, மெயின் ரோடு, சந்தை வளாகம், வைரிசெட்டிபாளையம் என்ற முகவரியில் செயல்படும். மேலும் மின்வாரியத்தின் உயர் மற்றும் தாழ் அழுத்த மின் பாதைகளுக்கு அருகில் போதிய இடைவெளி விட்டு கட்டிடங்கள் கட்ட வேண்டும். வரவிருக்கும் பருவமழை காலங்களில் மின் கம்பம், இழுவை கம்பிகளில் கால்நடைகளை கட்டாமல் இருக்க வேண்டும். மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை உரிய பிரிவின் அனுமதி பெற்று வாரிய பணியாளரின் முன்னிலையில் அகற்ற வேண்டும். வயல்வெளிகளில் மின்வேலி அமைப்பது சட்டப்படி குற்றம். இந்த தகவலை துறையூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story