ஹெல்மெட் இன்றி பயணம் - 21,984 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாத 21,984 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
சென்னை,
சென்னையில் இரு சக்கர வாகனத்தின் பின்னாள் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிந்து வருவது கட்டாயம் என ஏற்கனவே விதி இருந்தாலும் பெரும்பாலோர் இதைக் கடைப்பிடிப்பதில்லை. போலீசாரின் தீவிர தணிக்கையால் இரு சக்கர வாகனம் ஓட்டும் பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிந்து வந்தாலும், பின்னால் அமர்ந்து வருபவர்கள் அதைக் கடைப்பிடிப்பதில்லை.
இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து வருபவர்களும் தலைக்கவசம் அணிய வேண்டுமெனவும், தவறினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை போக்குவரத்துக் காவல்துறையினர் அறிவித்தனர்.
இந்நிலையில் சென்னையில் கடந்த 12 நாட்களில் ஹெல்மெட் அணியாத 21,984 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பின் இருக்கையில் அமர்ந்து ஹெல்மெட் அணியாமல் பயணம் செய்த 18,035 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது..
ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.21.98 லட்சம் அபராதம் வசூல்,ஹெல்மெட் அணியாமல் பின் இருக்கையில் அமர்ந்தவர்களிடம் ரூ.18 லட்சம் அபராதம் வசூல் என போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது