டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 26 Aug 2023 12:15 AM IST (Updated: 26 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள தகடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் அதே ஊரில் தனது அண்ணன், தம்பிகளுடன் சேர்ந்து வாடகைக்கு வாகனங்களை விடும் டிராவல்ஸ் மற்றும் சவுண்டு சர்வீஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யா(வயது 25). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சரவணன்(9) என்ற மகன், சரவணபிரியா(6) என்ற மகள் உள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று முருகன் அவரது அண்ணன், தம்பிகளிடம் பேசிக் கொண்டிருந்தபோது நித்யா குறுக்கிட்டு பேசியதாகவும் இதனால் அவரை முருகன் திட்டியதாகவும் தெரிகிறது. ஏற்கனவே உடல் நலம் சரியில்லாமல் இருந்த தன்னை கணவர் திட்டி விட்டாரே என்ற விரக்தியில் வீட்டுக்கு வந்த நித்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து அவரது கணவர் முருகன் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story