திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம் - அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல்


திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையம் - அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளதாக தகவல்
x

புதிய ஒருங்கிணைந்த முனையத்தின் முகப்பு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் 951 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த முனையத்தின் முகப்பு ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முனையத்தில் ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டுப் பயணிகளையும் கையாள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையத்தை அடுத்த மாதம் 2-ந்தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



Next Story