திருச்சி பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் முசிறி அருகே குணசீலத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், புரட்டாசி பிரமோற்சவத்தை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் முசிறி தி.மு.க. எம்.எல்.ஏ. தியாகராஜன் மற்றும் அறநிலையத்துறையினர் தேர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா' கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
Related Tags :
Next Story