மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - கல்லூரி மாணவர் பலி
x

காரியாபட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பள்ளத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மகன் கார்த்திக்ராஜா (வயது 20).

இவர் பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். கார்த்திக் ராஜா இன்று மதியம் தேர்வு எழுதுவதற்காக மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்குச் சென்றுள்ளார். காரியாபட்டி அருகே மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் பணிகள் நடப்பதால் ஒருவழிபாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் கார்த்திக் ராஜா இந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருக்கும் போது காரியாபட்டி அருகே எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக கார்த்திக் ராஜா வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இந்த விபத்தில் மாணவர் கார்த்திக் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆவியூர் போலீசார் கார்த்திக் ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story