மணலி விரைவு சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து; சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு..!


மணலி விரைவு சாலையில் கண்டெய்னர் லாரி மீது சிமெண்ட் கலவை லாரி மோதி கவிழ்ந்ததில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை

திருவொற்றியூர்:

சென்னை மாதவரத்தில் இருந்து சிமெண்ட் கலவை கலக்கும் லாரி ஒன்று திருவொற்றியூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் டிரைவர் ஓட்டி வந்தார். சாத்தாங்காடு காவல் நிலையம் அருகில் அதிவேகமாக சென்ற போது லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் சீத்தாராமன் (வயது 24) படுகாயமடைந்தார். அருகே இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாத்தாங்காடு போலீசார் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த டிரைவரை ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், திருவொற்றியூர் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக 8 டன் சிமெண்ட் கலவை கலந்து எடுத்து கொண்டு குறித்த நேரத்தில் போய் சேருவதற்காக அதிவேகமாக சென்றுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி முன்னால் சென்ற லாரி மோதி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதனால் மணலி விரைவு சாலையில் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

1 More update

Next Story