510 மூடை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தல்


510 மூடை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தல்
x

பரமக்குடியில் 510 மூடை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தப்பட்டது. மூடைகளை இறக்கி விட்டு குடோன் முன்பு லாரியை நிறுத்தி விட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது.

ராமநாதபுரம்

பரமக்குடி,

பரமக்குடியில் 510 மூடை ரேஷன் அரிசியுடன் லாரி கடத்தப்பட்டது. மூடைகளை இறக்கி விட்டு குடோன் முன்பு லாரியை நிறுத்தி விட்டு கும்பல் தப்பி ஓடி விட்டது.

அரிசியுடன் நின்றிருந்த லாரி

பரமக்குடி அருகே உள்ள கமுதக்குடி கிராமத்தில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு உள்ளது. இங்கிருந்து பரமக்குடி தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்கள் ஆகியவற்றிற்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டு சென்று வழங்குவது வழக்கம்.

அதேபோல் கடந்த 21-ந் தேதி காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் சேமிப்பு கிடங்கியில் இருந்து 10 லாரிகள் மூலம் அரிசிகள் மூடை, மூடையாக கொண்டு வரப்பட்டது. லாரிகள் மூலம் வந்த அரிசி மூடைகளை இறக்கி வைப்பதற்கு இடம் இல்லாததால் 10 லாரிகளில் ஏற்றி வந்த அரசி மூடைகளை இறக்காமல் லாரியுடன் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தன.

510 ரேஷன் அரிசி மூடைகள் கடத்தல்

இந்நிலையில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியை மர்ம நபர்கள் கடத்திச் சென்று அதில் இருந்த 510 அரிசி மூடைகளை திருடி விட்டு லாரியை அதே இடத்தில் கொண்டு வந்து நிறுத்தி வைத்துள்ளனர். கடத்தப்பட்ட ரேஷன் அரிசியின் மதிப்பு ரூ.6½ லட்சம் ஆகும்.

இந்த நிலையில் நேற்று காலை லாரி டிரைவர் மறவமங்களம் பகுதியை சேர்ந்த லெட்சுமணன் (வயது52) என்பவர் சென்று பார்த்தபோது லாரியில் இருந்த 510 அரிசி மூடைகள் காணாமல் போய் வெறும் லாரி மட்டும் நின்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்பு இதுகுறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறியுள்ளார். உடனே அவர்கள் மேல் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர்.

போலீசார் விசாரணை

ஆனால் அரிசி மூடைகளை கடத்தி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து அவர்கள் பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story