திருமானூர் பாலத்தில் லாரி டயர் வெடித்ததால் போக்குவரத்து பாதிப்பு
திருமானூர் பாலத்தில் லாரி டயர் வெடித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட திருமானூர்-விளாங்குடி கொள்ளிடம் ஆற்றுக்கு இடையே சுமார் 2 கிலோமீட்டரில் பாலம் உள்ளது. தஞ்சை மற்றும் அரியலூர் மாவட்டத்திற்கு இடையே பெரும் போக்குவரத்து இவ்வழியே நடந்து வருகிறது. இந்தநிலையில் நேற்று இந்தப் பாலத்தில் சென்ற லாரி ஒன்றின் டயர் வெடித்து பாலத்தின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பாலத்தை வாகனங்கள் கடக்க முடியாத நிலை ஏற்பட்டு பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர். பின்னர் போலீசார் மற்றும் அவ்வழியே ெசன்ற பயணிகள் ஒன்றிணைத்து லாரியை மெதுவாக தள்ளி ஓரங்கட்டினர். இதனால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story