இரட்டை குழந்தை விவகாரம்: "நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" - தமிழக அரசு அதிரடி


இரட்டை குழந்தை விவகாரம்: நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு அதிரடி
x

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்று விளக்கம் கேட்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறி உள்ளார்.

சென்னை

நயன்தாரா இரட்டை குழந்தை விவகாரம் பேசு பொருளாக மாறி உள்ள நிலையில், இந்தியாவில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது.

வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறினார்களா விக்கி-நயன் தம்பதி என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திருமணமான 4 மாதங்களில் நயன்- விக்கி இரட்டை குழந்தைகள் எப்படி? என கேள்விக்களை தொடுத்து வருகின்றனர்.

விதிகளை மீறி, வாடகை தாய் மூலம் நயன்தாரா குழந்தை பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிகளுக்கு உட்பட்டு வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றார்களா? என்று விளக்கம் கேட்கப்படும் என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறி உள்ளார்.

இதுகுறித்து பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் வாடகை தாய் மூலம் விதிமுறைகளின் படிதான் குழந்தை பெற்றார்களா என விளக்கம் கேட்கப்படும்.பொது சுகாதாரத்துறையின் மருத்துவக்கல்லூரி இயக்குநரகம் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.




Next Story