தொழிலதிபர் கொலையில் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - சிக்கிய கள்ளக் காதலி

தொழிலதிபர் கொலையில் திருப்பம்: விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல் - சிக்கிய கள்ளக் காதலி
x

நெல்லையில், கட்டுமான நிறுவன தொழிலதிபரை, கள்ளக் காதலியின் காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை,

நெல்லையில், கட்டுமான நிறுவன தொழிலதிபரை, கள்ளக் காதலியின் காதலன் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை, அபிஷேகபட்டியைச் சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் ஜேக்கப் ஆனந்தராஜ், புன்னை வெங்கப்ப குளத்தின் கரையில் இரு தினங்களுக்கு முன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவருடைய கார், சுத்தமல்லியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே கண்டெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

ஆனந்தராஜுக்கு வேலை பார்க்கும் இடத்தில், கணவரை பிரிந்து வாழும் தேவி என்பவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த பிரின்ஸ் என்பவருடன் தேவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 22-ம் தேதி, தேவியின் வீட்டுக்கு ஆனந்தராஜ் சென்றிருந்தபோது, அங்கு பிரின்ஸ் வந்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் ஆனந்தராஜை பிரின்ஸ் கொலை செய்து, தேவியின் உதவியுடன் உடலை, குளத்தங்கரையில் வீசிச் சென்றுள்ளார். இதையடுத்து தேவி, பிரின்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story