திருச்செந்தூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருவர் சடலமாக மீட்பு
கனமழையால் குரும்பூர் அடுத்த காரவிளையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருவரும் இழுத்து செல்லப்பட்டனர்.
தூத்துக்குடி,
திருச்செந்தூர் அருகே நாசரேத் திருவள்ளுவர் காலணியைச் சேர்ந்தவர் முத்துலிங்கம் (23). நாசரேத். 2-வது ஐசக் தெருவை சேர்ந்தவர் டேவிட்சன் (27). இவர்கள் இருவரும் கடந்த 18- ஆம் தேதி பெய்த கனமழையால் குரும்பூர் அடுத்த காரவிளையில் ஏற்பட்ட வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று இருவரும் வெள்ளக்கோவில் வாய்க்கால் அருகே முத்துலிங்கம் உடலும் சுகந்தலை காலனி அருகே டேவிட்சன் உடலும் மீட்கப்பட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதுகுறித்து குரும்பூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story