கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, இன்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகை-அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்


கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு, இன்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகை-அரசு, கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
x

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகிறார். ஓசூர் பகுதியில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு இன்று உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. வருகிறார். ஓசூர் பகுதியில் நடைபெறும் அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார்.

உதயநிதி ஸ்டாலின்

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

காலை 9 மணிக்கு ஓசூர் சீதாராம் மேட்டில் தி.மு.க. கொடியேற்று நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து பவானி பேலசில் நடைபெறும் நிகழ்ச்சியில் 600 முதியவர்களுக்கு பொற்கிழி வழங்குகிறார்.

பணி ஆணைகள் வழங்குகிறார்

அதைத்தொடர்ந்து ஓசூர் மீரா மஹாலில் மாற்றுக்கட்சியினர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து ஓசூர் வரம் மருத்துவமனையை திறந்து வைக்கிறார்.

அதைத்தொடர்ந்து காலை 11 மணிக்கு ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார்.

தொடர்ந்து தேன்கனிக்கோட்டை மல்லிகை பார்ம் ஹவுசில் நடைபெறும் தளி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சீனிவாசலுரெட்டி மற்றும் ஓசூர் மாநகராட்சி உறுப்பினரும், பொது சுகாதார குழு தலைவருமான என்.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோர் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பங்கேற்கிறார். பின்னர் மாலையில் சூளகிரியில் கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.


Next Story