14, 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு
14, 16 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு காரைக்குடியில் 2 நாட்கள் நடக்கிறது
காரைக்குடி
சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 14 மற்றும் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு வருகிற 17-ந்தேதி காலை 9 மணிக்கு 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், மறுநாள் காலை 7 மணிக்கு 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் வீரர்களின் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான வயது வரம்பு கடந்த 1.9.2009 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். இதேபோல் 16 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டியில் கலந்து கொள்பவர்களின் வயது வரம்பு கடந்த 1.9.2007 அன்றோ அல்லது அதற்கு பின்னரோ பிறந்திருக்க வேண்டும். மேலும் இதில் பங்கேற்க வருபவர்கள் வெள்ளைச் சீருடை, மற்றும் கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் ஆதார் அட்டையின் நகலை நேரில் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.