தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்


தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்
x

திட்டச்சேரி பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் துணை மின்நிலையம் இயங்கி வருகிறது.இதில் இருந்து திட்டச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திட்டச்சேரி துணை மின் நிலைய கட்டுப் பாட்டில் உள்ள பகுதிகளுக்கு மட்டும் எவ்வித முன் அறிவிப்பின்றி பல மணி நேரம் தொடர்ந்து மின் தடை ஏற்படுகிறது. மேலும் லேசான மழை பெய்த கூட பல மணிநேரம் மின்தடை ஏற்படுகிறது.இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே திட்டச்சேரி பகுதியில் தடையின்றி மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story